search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாயல்குடி விபத்து"

    சாயல்குடி அருகே மோட்டர் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாயல்குடி:

    சாயல்குடி அருகே உள்ள மாரியூர் கிராமத்தை சேர்ந்தவர் முகமது சேக்தாவூது (வயது 35). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று ஓப்பிலானை சேர்ந்த நண்பர் முகமது நிலா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    மலட்டாறு விலக்கு பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக ராமேசுவரம் நோக்கி சென்ற கார் டயர் வெடித்து தாறுமாறாக ஓடியது. மின்னல் வேகத்தில் வந்த கார் முகமது சேக்தாவூத் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த முகமது சேக்தாவூது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய முகமது நிலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து முகமது சேக்தாவூது மனைவி பாத்திமா சாயல்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்குப் பதிவு செய்து கர்நாடக மாநிலம் சென்னப்பட்டணத்தை சேர்ந்த கார் டிரைவர் மோகன்குமார் (29) என்பவரை கைது செய்தார்.
    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே இன்று காலை அரசு பஸ்சும் காரும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். #SayalkudiAccident
    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள மாயகுளம் பாரதி நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் அருள் (வயது 22). உமயசிங்கம் மகன் உமயபாலா (18), லிங்கம் மகன் விஜயராஜ் (18), ரவி மகன் கிருஷ்ணகுமார் (23), ராமச்சந்திரன் மகன் நவீன் (18), சக்திவேல் மகன் உபயகணேஷ் (20), முருகேசன் மகன் புவனேசுவரன் (16) ஆகிய 7 பேரும் பட்டாசு வாங்குவதற்காக காரில் சிவகாசி சென்றனர்.

    அங்கு பட்டாசுகளை வாங்கிவிட்டு இன்று அதிகாலை ஊருக்குப் புறப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள கீழச்செல்வனூர் போலீஸ் நிலையம் அருகே காலை 5 மணிக்கு கார் சென்று கொண்டிருந்தது.

    அப்போது ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் அரசு பஸ் அங்கு வந்தது. எதிர்பாராத விதமாக பஸ்சும் காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. அதில் பயணம் செய்த அருள், உமயபாலா, விஜயராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றவர்கள் பலத்த காயமடைந்தனர்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கீழச்செல்வனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பஸ் டிரைவர் இதம்பாடல் கிருஷ்ணனும் (57) விபத்தில் காயம் அடைந்தர். விபத்து குறித்து கீழச்செல்வனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #SayalkudiAccident
    ×